EIA அவகாசம் நீட்டிப்பு – மத்திய அரசு மேல்முறையீடு
டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மத்திய சுற்றுச்சூழல் துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
இந்தியாவில் தற்போது, “சூழலியல் தாக்க மதிப்பீடு 2006” நடைமுறையில் உள்ளது.இதற்கிடையில் புதிய மாறுதல்களுடன் கூடிய புதிய வரைவு கடந்த மார்ச் மாதம் 12 -ஆம் தேதி மத்திய அரசு “சூழலியல் தாக்க மதிப்பீடு 2020” என்ற பெயரில் வெளியிட்டது.அந்த வரையறையின் படி “சூழலியல் தாக்க மதிப்பீடு 2020” அனுமதி வழங்கப்பட்டால் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதுகாப்பும் இருக்காது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.இது குறித்து பல தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கை மீது கருத்து கூற அவகாசம் வழங்கியதை எதிர்த்து முறையீடு செய்யப்பட்டுள்ளது . டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மத்திய சுற்றுச்சூழல் துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. வரைவு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையை 22 மொழிகளில் மொழிபெயர்க்க வேண்டும் என்று கூறி ஜூன் 30ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு எதிராகவும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மேல்முறையீடு செய்துள்ளது.