யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூருக்கு காவல் நீட்டிப்பு
யெஸ் வங்கி நிறுவனர் ரானா கபூருக்கு காவலில் வைக்க மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தனியார் வங்கியான யெஸ் வங்கி வாரா கடன்களுக்கு அதிகமான டெபாசிட்கள் வழங்கியதால் தற்போது நிதிநெருக்கடியில் உள்ளது. இதைத் தொடர்ந்து யெஸ் வங்கி நிர்வாகத்தை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது.யெஸ் வங்கிகளை நிர்வகிக்க எஸ்பிஐ வங்கியின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி பிரசாந்த் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் யெஸ் வங்கி நிறுவனர் ரானா கபூருக்கு வரும் 20-ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க அனுமதி வழங்கி மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது