புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு…! – தமிழிசை சௌந்தரராஜன்
மே-31ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீடித்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரியில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து, கடந்த 10-ம் தேதி முதல், 24ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஊரடங்கு நாளையுடன் முடிவடையும் நிலையில், தற்போது மே-31ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீடித்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய கடைகள் திறந்திருக்கும். பொதுமக்கள் தங்களது வீடுகளின் அருகில் உள்ள கடைகளில் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குமாறும், அதிக தூரம் சென்று பெரிய கடைகளில் பொருட்களை வாங்குவதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.