யுஜிசி – நெட்டுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டிருந்த கடைசித் தேதி இன்றிலிருந்து ஜூன் 15 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் தேசியத் தேர்வுகள் முகமை என்டிஏ சார்பில், பல்வேறு உயர்கல்வி படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளுக்கான தேர்வுத் தேதிகள் அறிவிக்கப்பட்டு, அதற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் நாட்கள் குறித்த விவரங்கள் அறிவிக்கப்படும். அதன் பின்னர் ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்படும். இதனிடையே, கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், மத்திய அரசு நாடு முழுவதும் 5 ஆம் கட்ட ஊடரங்கு பிறப்பித்தது.
இதையடுத்து, கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து வகை நிறுவனங்களும் மூடப்பட்டன. இதனால் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் மாணவர்கள் தவித்தனர். இதற்கிடையே தேசியத் தேர்வுகள் முகமை சார்பில் நடத்தப்பட உள்ள கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான தேசியத் தகுதித் தேர்வுக்கு (நெட்) விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
தற்போது ஊரடங்கு மேலும் நீடிக்கப்பட்டுள்ளதால் யுஜிசி – நெட்டுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டிருந்த கடைசித் தேதி இன்றிலிருந்து ஜூன் 15 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் தெரிவித்துள்ளார். இதுபோன்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வு, IGNOU, இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சில் ( ICAR ) உள்ளிட்ட 5 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் ஜூன் 15 ஆம் தேதி வரை விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை : பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அதிகாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை…
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…