ஐடி மற்றும் பிபிஓ ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய காலக்கெடு நீட்டிப்பு.. மத்திய அரசு அதிரடி!
ஐடி மற்றும் பிபிஓ நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு கருதி, வீட்டில் இருந்து பணிபுரியும் காலவகாசத்தை டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீடித்தது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வரும் நிலையில், சில தளர்வுடன் ஊரடங்கை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மக்கள் பலரும் அலுவலகங்களுக்கு சென்று பணியாற்றி வருகின்றனர்.
இந்தநிலையில், ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்தும், ஊழியர்களின் பாதுகாப்பு கருதி தகவல் தொழில்நுட்பம் (ஐடி) மற்றும் பிபிஓ நிறுவனங்களின் பணிபுரியும் ஊழியர்களை ஜூலை 31 வரை வீட்டிலிருந்தே பணியாற்ற மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
அதில், ஐ.டி பணியாளர்களில் சுமார் 85% பேர் வீட்டிலிருந்தே பணிபுரிகின்றனர். மேலும் முக்கியமான வேலைகள் இருந்தால் மட்டுமே அவர்கள் அலுவலகங்களுக்குச் செல்கின்றனர். ஆனால் சில நிறுவனங்கள், ஊழியர்களின் பாதுகாப்பு கருதி மேலும் சில நாட்களுக்கு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதி அளிக்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக, தகவல் தொழில்நுட்பம் மற்றும் பிபிஓ நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், இந்தாண்டு இறுதி வரை வீட்டிலிருந்தே பணியாற்ற மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
DoT has further extended the relaxations in the Terms and Conditions for Other Service Providers (OSPs) upto 31st December 2020 to facilitate work from home in view of the on going concern due to #COVID19.
— DoT India (@DoT_India) July 21, 2020