ஜம்மு-காஷ்மீரின் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தியின் வீட்டு காவலை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க காஷ்மீர் நிர்வாகம் உத்தரவு.
கடந்த ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கு உண்டான அதிகாரம் வழங்கும் 370 ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்கள் ஆக பிரித்து மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியது தினமே ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி, தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா மற்றும் அவரது மகன் உமர் அப்துல்லா ஆகிய நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா ஆகிய மூவர் மட்டும் பொது பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.
பொது பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள இவர்களை விசாரணையின்றி ஓராண்டு வரையும் காவலில் வைத்திருக்க முடியும். கடந்த வருட ஆகஸ்ட் மாதம் முதல் வீட்டுக் காவலில் இருந்த உமர் அப்துல்லா மற்றும் பரூக் அப்துல்லா ஆகியோர் இந்த வருடம் மார்ச் மாதம் விடுவிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தியை அரசு விடுவிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அது மட்டுமல்லாமல் வருகிற ஆகஸ்ட் 5-ம் தேதியுடன் அவரது வீட்டு காவலும் முடிவடைய இருப்பதால் மேலும் மூன்று மாதங்களுக்கு வீட்டு காவலில் வைக்க ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…