நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு ! முன்பதிவு செய்யப்பட்ட 39 லட்சம் டிக்கெட்டுகள் ரத்து -இந்தியன் ரயில்வே
ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக முன்பதிவு செய்யப்பட்ட 39 லட்சம் ரயில் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது .
கொரோனா காரணமாக இந்தியாவில் முதலில் ஊரடங்கு ஏப்ரல் 14-ஆம் தேதி வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டது.இதனால் இந்தியன் ரயில்வே ஏப்ரல் -15 முதல் ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்யலாம் என்று அறிவித்தது.இதன் விளைவாக பலரும் முன்பதிவு செய்தனர்.ஆனால் நேற்றுடன் ஊரடங்கு முடிய இருந்த நிலையில் பிரதமர் மோடி மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார்.
எனவே நாட்டில் உள்ள பேருந்து ,ரயில், விமான சேவைகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.இதனால் அனைத்து முன்பதிவுகளும் நிறுத்தப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது.எனவே இன்று முதல் ரயிகளில் பயணிப்பதற்காக ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டிருந்த 39 லட்சம் டிக்கெட்டுகளை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுளள்து.ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கான கட்டணத்தை ஜூன் 3-ஆம் தேதி கவுண்டர்களின் திருப்பபெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்யப்பட்டவர்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் சிறப்பு ரயில்கள் இயக்குவதற்கு தற்போது திட்டங்கள் எதுவும் இல்லை என்றும் இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.