ஹரியானாவில் ஜூலை 5 வரை சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்ட பொதுமுடக்கம்..!

Default Image

ஹரியானா மாநிலத்தில் சில தளர்வுகளுடன் ஜூலை 5 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

ஹரியானா மாநிலத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதன் காரணத்தால் சில தளர்வுகளுடன் ஜூலை 5 வரை ஊரடங்கை நீட்டித்துள்ளது. இங்கு அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகள்:

  • அனைத்து கடைகளும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்க அனுமதி.
  • மால்கள் காலை 10 மணி முதல் 8 மணி வரை திறக்க அனுமதி.
  • ஹோட்டல் மற்றும் மதுக்கடைகள் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை 50% இருக்கைகளுடன் திறக்க அனுமதி. ஹோட்டலில் இரவு 10 மணி வரை டெலிவரி செய்ய அனுமதி.
  • 50% பேருக்கு மதவழிபாட்டு தளங்களில் அனுமதி.
  • 100% ஊழியர்களுடன் கார்ப்பரேட் அலுவலகம் இயங்க அனுமதி.
  • திருமணம் மற்றும் இறுதி சடங்குகளில் 50 பேருக்கு மட்டும் அனுமதி. திருமண ஊர்வலங்களுக்கு தடை.
  • காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை உடற்பயிற்சி கூடங்கள் இயங்க அனுமதி.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்