மேலும் ஒரு மாதம் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும்.! – கோரிக்கை விடுத்த மாநில அரசுகள்.!
ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் முழுஊரடங்கை மேலும் ஒரு மாத காலம் நீட்டிக்க வேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளாராம்
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் மார்ச் 24 முதல் 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன் பின்னர் பிரதமருடனான முதலமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு,
ஏப்ரல் 14ஆம் தேதி மீண்டும் 19 நாட்கள் ஊரடங்கு நீடிக்கப்பட்டு மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என பிரதமர் அறிவித்தார்.
இந்நிலையில் இன்று 9 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். அதில் பங்கேற்ற மாநில முதல்வர்களில் 4 மாநில முதல்வர்கள் ஊரடங்கை நீட்டிக்க கோரி பிரதமரிடம் கோரிக்கை விடுதுள்ளார்களாம். அதிலும், ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் முழுஊரடங்கை மேலும் ஒரு மாத காலம் நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளாராம். கொரோனா தடுப்பு பணியில் முன்னோடியில் இருக்கும் முக்கிய மாநிலமான ஒடிசா மாநிலத்தின் இந்த கோரிக்கை மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
மீண்டும் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், கொரோனா பாதிக்கப்பட்ட இடங்களில் முழு ஊரடங்கும் மற்ற பகுதிகளில் சில தளர்வுகளும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.