ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் -பிரதமரிடம் முதல்வர்கள் கோரிக்கை

ஏப்ரல் 30 வரை ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என மாநில முதல்வர்கள் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால், கொரோனா தொற்று சமூக பரவலாக மாறாமல் தடுக்கும் வண்ணம் 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தற்போதும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சில மாநில முதல்வர்கள், மருத்துவர்கள் என பலர் நோய் பரவலை தடுக்க ஊரடங்கு நீட்டிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
தற்போது இந்த சூழ்நிலையில், பிரதமர் மோடி, அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொளி மூலம் தீவிர ஆலோசனை மேற்கொண்டார்.இந்த ஆலோசனையில் ஏப்ரல் மாத இறுதிவரை ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என பிரதமரிடம் மாநில முதல்வர்கள் கோரிக்கை விடுத்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025