உ.பி கேங்ஸ்டர் ஆதிக் வழக்கறிஞர் வீட்டின் அருகே வெடிகுண்டு சம்பவம்.! திட்டமிட்ட சதியா.?
அதிக் அகமது வழக்கறிஞரின் வீட்டின் அருகே வெடிகுண்டு வீசப்பட்டது, இது அவருக்கு வைக்கப்பட்ட இலக்கு அல்ல என்று போலீசார் தெரிவித்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கொல்லப்பட்ட குண்டர் கும்பல் அதிக் அகமதுவின் வழக்கறிஞர் வீட்டின் அருகே இன்று நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இது அவருக்கு இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல என்றும், இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக நடந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
மேலும் இந்த வெடிகுண்டு தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கடந்த சனிக்கிழமை, அரசியல்வாதியாக மாறிய அதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரஃப் ஆகியோர் ஊடகவியலாளர்கள் போல் நடித்த மூன்று நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
உமேஷ் பால் கடத்தல் வழக்கில் தண்டனை அளிக்கப்பட்ட அதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் இருவரும், பிரயாக்ராஜில் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தற்போது கொல்லப்பட்ட அதிக் அகமதுவின் வக்கீல்களில் ஒருவரின் வீட்டிற்கு வெளியே இந்த வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது பேசிய போலீசார் இது இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல, இரு குழுவினருக்கு இடையே நடந்த தாக்குதல் என தெரிவித்தனர்,