பட்ஜெட் பற்றிய எதிர்பார்ப்புகள்
நிதியறிக்கை என்பது, ஒரு நிறுவனத்தின் அல்லது அரசின் ஒரு ஆண்டிற்கான அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான நோக்கங்கள் அல்லது திட்டங்களை குறித்து முன்கூட்டியே திட்டமிட்டு, அதற்காக பணம் மற்றும் பொருளை திட்டமிட்டு முதலீடு செய்வது ஆகும்.
இன்று அனைவரும் அனைத்து துறைகளிலும் வேலை செய்து வருகின்றனர். நிதியறிக்கை மூலம் பல நலத்திட்டங்கள் மக்களை சென்றடைவதுடன், அதற்காக செலவழிக்கப்படுகிற பணமும், அரசிற்கும் மக்களுக்கும் பயனுள்ளதாகவும், ஒரு நிறுவனமோ அல்லது அரசோ குறித்த காலத்திற்குள், அதற்கென்று குறித்த பணத்தையோ அல்லது பொருளையோ சரியான முறையில் பயன்படுத்த உதவுகிறது.
இவ்வாறு திட்டமிட்டு செயல்படுவதன் மூலம், அரசோ அல்லது மற்ற நிறுவனங்களோ தங்களின் நோக்கங்களையும் திட்டங்களையும் எந்த பிரச்சனையும் இல்லாமல் நிறைவேற்ற உதவியாக இருக்கும்.