மீண்டும் மோடி.? I.N.D.I.A கூட்டணிக்கு எத்தனை இடங்கள்.? வெளியானது NDTV கருத்து கணிப்பு…
மக்களவை தேர்தல்: 2024 மக்களவைத் தேர்தலுக்கான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கருத்துக் கணிப்பு முடிவுகள் இன்று மாலை 6.30 மணி முதல் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிந்த பிறகு வெளியாகும் என கூறப்பட்டு இருந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கிறது.
மேலும், 2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கிய நிலையில், இறுதி கட்ட வாக்குப்பதிவு இன்று (ஜூன் 1) நிறைவடைந்துள்ளது. இந்த தேர்தலுக்கான முடிவுகள் வரும் ஜூன் 4-ஆம் தேதி வெளியாகவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி, என்டிடிவி (NDTV) செய்தி நிறுவனம் தங்களுடைய கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ.(NDA) கூட்டணி 362 – 392 இடங்களை பிடிக்கும் என்றும், I.N.D.I.A கூட்டணி 141-161 இடங்களையும், மற்றவை 10-20 இடங்களை பிடிக்கும் எனவும் NDTV கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
அதே போல, தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் பாஜக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணி (NDA) 5 இடங்களை பிடிக்கும் எனவும், I.N.D.I.A கூட்டணி 34-38 இடங்களை பிடிக்கும் எனவும், அதிமுக (ADMK) 0 எந்த ஒரு இடத்தையும் பிடிக்காது எனவும், மற்ற கட்சிகள் 1 இடங்களை பிடிக்கும் எனவும் NDTV செய்தி நிறுவனம் தங்களது கருத்து கணிப்பில் தெரிவித்துள்ளது.