மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையில் வசித்து வந்தவர் ரெபெல்லோ ஆவார்.இவர் ஒரு இசை கலைஞராகவும் இருந்துள்ளார்.இந்நிலையில் இவர் சில வருடங்களுக்கு முன்பு வீதியில் அனாதையாய் சுற்றித்திரிந்த ஆராதியா பாட்டில் என்ற பெண்ணை தத்தெடுத்து வளர்த்துள்ளார்.
அந்த பெண்ணுக்கு அப்பகுதியில் வசிக்கும் பதினாறு வயது சிறுவனுடன் நட்பு ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது.இதன் அடிப்படையில் ஆராதியா தந்தைக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் அப்பா என்னை மன்னியுங்கள் கடவுளே என்னை மன்னியுங்கள் நான் மிகவும் மோசமான பெண் என ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்.பின்னர் தனது காதலனுடன் சேர்ந்து தந்தையை தலையில் அடித்த அவர்கள் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர்.
பின்னர் ரெபெல்லோ இறந்ததை உறுதி செய்த அவர்கள் சடலத்தை மூன்று நாட்களாக வீட்டு கழிவறையில் வைத்து வந்துள்ளனர்.இந்த நேரத்தில் சடலத்தின் கால்களை ஸ்டவ் மீது வைத்து எரித்துள்ளனர்.
பின்னர் உடலின் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் வைத்து மும்பையில் உள்ள மிதி ஆற்றின் கரையில் வீசி சென்றுள்ளனர்.இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் சூட்கேசில் இருந்த உடல் பாகங்களில் ரெபெல்லோ அணிந்திருந்த சட்டையில் அப்பகுதியில் உள்ள டெய்லர் கடையின் அடையாளம் இருந்ததை வைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
அதன் பிறகு குற்றவாளிகளை கண்டறிந்த காவல் துறையினர் ஆராதியா பாட்டிலையும் அவரது காதலனையும் கைது செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.மேலும் விசாரணையில் தந்தை பல முறை பாலியல் தொந்தரவு கொடுத்ததால் கொலை செய்ததாக ஆராதியா கூறியுள்ளார்.
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தந்தை பெரியார் பற்றி பல்வேறு…
நியூ யார்க் : 2016 அமெரிக்க தேர்தல் சமயத்தில் நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்ததாகவும், அதனை தனது நிதி…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று டெல்லி சட்டசபை தேர்தலும், உ.பி மாநிலத்தில் ஒரு தொகுதி மற்றும் ஈரோடு…
சென்னை: நடிகர் சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்துக்கு 'ரெட்ரோ' என…
கேரளா: மலையாள நடிகை ஹனிரோஸ் அளித்த பாலியல் புகாரில், பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் மீது வழக்குப்பதிவு செய்த எர்ணாகுளம்…