உ.பி.யில் பள்ளி மாணவனை, கார் இழுத்துச்சென்ற பரபரப்பு சிசிடிவி காட்சிகள்.!
உ.பி.யில் 15 வயது பள்ளி மாணவன் மீது கார் மோதி, 1 கி.மீ தூரம் இழுத்து செல்லப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தின் ஹர்தோய் என்ற இடத்தில், 15வயது பள்ளி மாணவன் ஒருவன் மீது கார் மோதியதில், காரின் பின்புறத்தில் மாணவனின் கால் சிக்கிக் கொண்டது. இதனையடுத்து காரின் பின்புறத்தில் கால் சிக்கியதால், 1 கி.மீ தூரம் வரை சிறுவன் இழுத்து செல்லப்பட்டான்.
இதனைப்பார்த்த அப்பகுதி மக்கள் குழந்தையை காப்பாற்ற, கார் டிரைவரை நிறுத்த முயன்று காரின் பின்னால் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. அந்த சிறுவன் தனது சைக்கிளில் கோச்சிங் சென்டருக்கு செல்லும்போது இந்த சம்பவம் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
UP के जिला हरदोई में ट्यूशन से लौट रहे छात्र को कार ने टक्कर मारी मार दी। छात्र का पैर कार में फंसा गया कार उसको घसीटते ले गई।
भीड़ ने ड्राइवर जितेंद्र पकड़ा, शीशे तोड़े, गाड़ी पलटी। @hardoipolice @ASP4UP pic.twitter.com/KsWq62lUEA
— Komal karanwal (@Komalkaranwal_) January 7, 2023