மத்திய பிரதேசத்தில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள பாலேஷ்வர் மகாதேவ் கோவிலில் உள்ள படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தூரில் ராம நவமியை முன்னிட்டு படேல் நகரில் உள்ள பாலேஷ்வர் மகாதேவ் கோவிலில் பூஜைகள் நடந்துகொண்டிருந்தது. அப்பொழுது திடீரென கோயிலில் உள்ள படிக்கட்டு கிணற்றின் மேல் கூரை இடிந்து விழுந்துள்ளது.
இந்த கிணறு இடிந்து விழுந்ததில் 25க்கும் மேற்பட்டோர் விழுந்துள்ளனர். தண்ணீர் அதிகம் இல்லாத இந்த கிணறு 40 முதல் 50 அடி ஆழம் கொண்டுள்ளது. தற்பொழுது படிக்கட்டுக் கிணற்றில் சிக்கிய 10 பேர் வெளியேற்றப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். கிணற்றில் தவறி விழுந்தவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. கிணற்றின் மேல் கூரை இடிந்து விழுந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மத்திய பிரதேச முதல்வர் எஸ்.எஸ்.சௌஹான், “இந்தூர் கோவிலில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்தது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். மீட்பு பணி நடந்து வருகிறது. 10 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர், ஒன்பது பேர் சிக்கியுள்ளனர், அவர்கள் மீட்கப்படுவார்கள். மற்றவர்களை மீட்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன,” என்று கூறினார்.
சென்னை : விஜய் சேதுபதி இன்று (ஜனவரி 16) தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரை பிரபலங்கள் பலரும்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. இதனால், மீண்டும்…
நியூ யார்க் : அமெரிககாவை சேர்ந்த நிதிசார்பு ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம் இந்திய வர்த்தகர்கள் மத்தியில் மிக பிரபலமான…
ஸ்ரீஹரிகோட்டா : விண்ணில் 2 செயற்கைகோள்களை இணைத்து அதன் மூலம் 2 செயற்கைகோள்களுக்கு இடையே எரிபொருள் அல்லது வேறு பொருட்கள்…
ராஜ்கோட்: மகளிருக்கான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்தை 304 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி தொடரை…
மும்பை: பாலிவுட் நடிகர் சயிப் அலிகானை வீடு புகுந்து மர்ம நபர் கத்தியால் குத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பாந்த்ராவில்…