மகாராஷ்டிராவில் காலை உணவு தர தாமதமானதால், ஆத்திரத்தில் மருமகளை துப்பாக்கியால் சுட்டு கொன்ற மாமனார்.
மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் சீமா ராஜேந்திரா(42) என்ற பெண்மணி தனது காலை உணவை தயாரித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது தொழிலதிபரான காசிநாத் பாட்டில் என்பவர் தனக்கு காலை உணவு தருவதற்கு தாமதமானதால் கோபமடைந்து அவர் தான் வைத்திருந்த உரிமம் பெற்ற துப்பாக்கியால் மருமகளை சுட்டுள்ளார்.
இந்த சம்பவம் நடந்த போது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வீட்டில் இருந்த நிலையில் அந்த பெண்ணை உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக அறிவித்துள்ளனர். மருமகளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு காசிநாத் தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…
விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…
லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…