பரபரப்பு : மருமகளை சுட்டு கொன்ற மாமனார்..! நடந்தது என்ன..?

Default Image

மகாராஷ்டிராவில் காலை உணவு தர தாமதமானதால், ஆத்திரத்தில் மருமகளை துப்பாக்கியால் சுட்டு கொன்ற மாமனார். 

மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் சீமா ராஜேந்திரா(42) என்ற பெண்மணி தனது காலை உணவை தயாரித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது தொழிலதிபரான காசிநாத் பாட்டில் என்பவர் தனக்கு காலை உணவு தருவதற்கு தாமதமானதால் கோபமடைந்து அவர் தான் வைத்திருந்த உரிமம் பெற்ற துப்பாக்கியால் மருமகளை சுட்டுள்ளார்.

இந்த சம்பவம் நடந்த போது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வீட்டில் இருந்த  நிலையில் அந்த பெண்ணை உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக அறிவித்துள்ளனர். மருமகளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு காசிநாத் தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்