பரபரப்பு..! மகாராஷ்டிராவில் தலைமை செயலகத்திற்குள் புகுந்து விவசாயிகள் போராட்டம்..!

STRIKE

மகாராஷ்டிராவில் அரசின் திட்டங்களுக்காக அரசு தங்களது நிலத்தை எடுத்துக் கொள்ளும் போது, அதற்கு சரியான இழப்பீடு தொகை வழங்க வேண்டும் விவசாயிகள் என தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், இதனை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தனர்.

அவர்களிடம் பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையில், அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை.  இந்த நிலையில் மகாராஷ்டிரா தலைமை செயலகத்தின் முன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், தடுப்புகளை தகர்த்து, விவசாயிகள் தலைமை செயலகத்திற்குள் சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொழிற்சாலை அமைக்க கையகப்படுத்திய நிலங்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை என விவசாயிகள் குற்றச்சாட்டி வந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள தலைமைச் செயலகத்தில் நுழைந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டதில் ஈடுபட்டுள்ளனர். போராட்டக்காரர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த போலீசார் முயற்சித்து வருகின்றனர். 

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் அமைச்சர் தாதாஜி பூஷே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மேலும், சில விவாசாயிகள் தடுப்பு காவலில் வைப்பதற்காக அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்