தரமான சாலை வேண்டும் என்றால் சுங்க கட்டணம் கட்டுங்கள் – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி!
பயணிக்க தரமான சாலைகள் வேண்டும் என்றால் சுங்கக் கட்டணங்களை மக்கள் முறையாக கட்டிட வேண்டும் என்று மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
சுங்க கட்டணம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் பேசிய அவர் கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் சுமார் 10 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை புதிதாக சாலைகள் அமைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். சுங்க கட்டணம் அதிகம் வசூலிக்கப்படுவதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த நிதின் கட்கரி, சுங்க சாவடி அமைந்துள்ள பகுதிகளை பொறுத்து கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாவும், காலத்திற்கு தகுந்தாற் போல சுங்க கட்டணம் மாற்றி அமைக்கப்படும் என்றும் ஆனால்,ஒரு போதும் நீக்கப்படாது என்றும் கூறியுள்ளார். மேலும், தரமான சாலைகள் வேண்டும் என்றால் சுங்க கட்டணம் செலுத்துங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.