இன்று வெளியாகிறது பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத்தின் தண்டனை விவரம்!
கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவிற்கு ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தண்டனை அறிவிக்க உள்ளது.இதனால் அவர் குறித்து இறுதி தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது. 89 கோடி ரூபாய் ஊழல் நிரூபிக்கப்பட்டதையடுத்து, 16 பேரை குற்றவாளிகள் என கடந்த 23ம் தேதி நீதிமன்றம் அறிவித்தது.இதையடுத்து, ராஞ்சியின் பீர்சா முண்டா சிறையில் லாலு அடைக்கப்பட்டார்.
அதிகபட்சமாக லாலுவுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாக சட்டவல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.இதன் காரணமாக லாலுவுக்கு வயதாகிவிட்டதாலும், உடல்ரீதியாக நோய்கள் இருப்பதாலும் குறைந்தபட்ச தண்டனை வழங்கும்படி அவருடைய வழக்கறிஞர்கள் இன்று மனுத்தாக்கல் செய்ய உள்ளனர்..அவருக்கு குறைந்தபட்ச தண்டனை கிடைக்குமா என்பதை பொருத்து இருந்துதான் பார்க்க வேண்டும் ….
source: dinasuvadu.com