Categories: இந்தியா

முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஒரு நாள் நீதிமன்ற காவல்..!

Published by
murugan

ஜார்கண்ட் மாநிலத்தில்,  நில மோசடி, நிலக்கரி ஊழல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடைபெற்றதாக அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு தொடர்பிருப்பதாக அவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு முதற்கட்ட விசாரணை கடந்த மாதம் 20 ஆம் தேதி நடைபெற்றது.

முதற்கட்ட விசாரணையை தொடர்ந்து ஜனவரி 27ஆம் தேதியில் இருந்து 31ஆம் தேதிக்குள் ஹேமந்த் சோரன் நேரில் ஆஜராக அமலாக்கத்துறையினர் சம்மன் அனுப்பி இருந்தனர். அதைத் தொடர்ந்து, கடந்த திங்கள்கிழமை டெல்லி சென்ற ஹேமந்த் சோரன் திடீரென தலைமறைவானார். அவரின் இல்லத்திற்குச் சென்று அமலாக்கத்துறை சோதனை நடத்தினர்.

பின்னர் திடீரென ஹேமந்த் சோரன் நேற்று ராஞ்சி திரும்பினார். ராஞ்சி வந்ததும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை நேற்று கூட்டி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் தான் கைதுசெய்யப்பட்டால் என்ன செய்யலாம் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது என கூறப்படுகிறது.

நடுத்தர மக்களுக்கு புதிய குடியிருப்பு திட்டம்! பட்ஜெட் குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கம்!

இதையெடுத்து நேற்று அமலகத்துறை முன் ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆஜரானார். அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராவதற்கு முன்னரே ஜார்கண்ட்  ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்துவிட்டார். இதன் பிறகு சோரன் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகினர். பல மணிநேர விசாரணை முடிந்த பின்னர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், இன்று ஹேமந்த் சோரனை ராஞ்சி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை ஆஜர்படுத்தினர். அப்போது ஹேமந்த் சோரனை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை அனுமதி கோரிய நிலையில் ஒரு நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ஜார்க்கண்ட் அமைச்சரவையில் பட்டியலினத்தோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த சம்பாய் சோரன் ஜார்கண்ட் மாநில புதிய முதலமைச்சராகப் பதவியேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Recent Posts

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…

15 minutes ago

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

51 minutes ago

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

3 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

4 hours ago

மகளிர் ஒருநாள் போட்டி: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்!

குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…

5 hours ago

ஏற்றமா? இறக்கமா? ‘விடுதலை 2’ இரண்டாம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம்.!

சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…

5 hours ago