உலகளாவிய தொழில் வள உருவாக்கத்திற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்.! பியூஷ் கோயல் கோரிக்கை.!
தொழில்வளத்தை உலகளாவிய அளவுக்கு விரிவுபடுத்தும் நோக்கிற்கு அனைத்து நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஜி20 மாநாட்டில் உரையாற்றினார்.
இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், உள்ளிட்ட 20 உலக நாடுகளை உள்ளடக்கிய அமைப்பு ஜி20 மாநாடு. இந்த மாநாட்டின் இந்த வருட 2023க்கான தலைமையை இந்தியா ஏற்றுள்ளது. அதன் காரணமாக உலக ஜி20 மாநாட்டின் பிரதிநிதிகள் தற்போது இந்தியாவில் இருக்கின்றனர். பல்வேறு மாநிலங்களில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது .
தற்போது ஹைதிராபாத்தில் இந்த ஜி20 மாநாடு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறுகையில், அனைவரையும் உள்ளடக்கும் வகையில் புதிய தொழிலை உலகளாவில் இணைப்புகளை பெரிதாக விரிவுபடுத்த அனைத்து நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கேட்டுக்கொண்டார்.
உலகளாவிய புதிய தொழிலுக்கான ஏதுவான சூழல் அமைப்பை வலுப்படுத்த வழிகாட்டுதல் மற்றும் தொழில்முனைவோர்களின் சர்வதேச தொடர்பை உருவாக்க மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அழைப்பு விடுத்தார்.