2027ல் இந்தியாவில் அனைவரும் பணக்காரர்கள் : அறிக்கை ..!
2027ஆம் வருடத்துக்குள் உலக அளவில் இந்தியாவில் அதிக செல்வந்தர்கள் உருவாகலாம் என ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.
உலக புகழ் பெற்ற வங்கிகளில் ஒன்றான ஆப்ரிஆசியா வங்கி தற்போதுள்ள அதிக செல்வந்தர்கள் அடங்கிய 10 நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அத்துடன் இன்னும் 10 வருடங்களில் அதாவது 2027ல் இன்னும் அதிக செல்வந்தரகள் உருவாகலாம் என தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும் சீனாவில் செல்வந்தர்கள் எண்ணிக்கை கூடலாம் என அந்த ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய செல்வந்தர்கள் உள்ள நாடுகள் விவரம் வருமாறு :
முதல் இடத்தில் ஜப்பான் உள்ளது. இந்த நாட்டில் உள்ள மக்கள் 19522 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு செல்வம் வைத்துள்ளனர்.
இரண்டாம் இடத்தில் சுவிட்சர்லாந்து உள்ளது.
மூன்றாம் இடத்தில் தென் கொரியா,
நான்காம் இடத்தில் கனடா,
ஐந்தாம் இடத்தில் ஹாங்காங் ஆகியவை உள்ளன.
அடுத்ததாக ஆஸ்திரேலியா, ரஷ்யா, மற்றும் அமெரிக்கா ஆகிய இடங்களில் 6, 7, மற்றும் 8 ஆகிய இடங்களில் உள்ளன.
இந்தியா தற்போது ஒன்பதாம் இடத்தில் உள்ளது.
வரும் பத்தாண்டுகளில் சுமார் 238 கோடீஸ்வர்கள் இந்தியாவில் உருவாகலாம் என ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இதனால் இந்தியா அப்போது முதலிடத்தில் இருக்கலாம் என கூறப்படுகிறது.
தற்போது பத்தாம் இடத்தில் உள்ள சீனா வர்த்தகத் துறையில் இன்னும் முன்னேற்றம் அடைய வாய்ப்புள்ளதால் அடுத்த பத்தாண்டுகளில் இரண்டாம் இடத்துக்கு செல்ல வாய்ப்புள்ளதகக் கூறப்படுகிறது.