மொழி அடிப்படையில் சர்ச்சையைக் கிளப்ப முயற்சி நடப்பதாக பிரதமர் மோடி குற்றச்சாட்டு.
பாஜக தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் காணொளி வாயிலாக பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநில மொழியும் இந்தியாவின் அடையாளம் தான். மாநில மொழிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. கடந்த சில நாட்களாக மொழி அடிப்படையில் சர்ச்சையை கிளப்ப முயற்சி நடக்கிறது என்றும் இந்திய கலாச்சாரத்தின் பிரதிபலிப்பை பாஜக ஒவ்வொரு பிராந்திய மொழிகளிலும் காண்கிறது எனவும் கூறினார்.
புதிய கல்வி கொள்கையில் ஒவ்வொரு பிராந்திய மொழிக்கும் முக்கியத்துவம் அளித்துள்ளோம் என தெரிவித்துள்ளார். இந்தி திணிப்பு பற்றி சர்ச்சை நிலவி வரும் நிலையில், மாநில மொழிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என கூறியுள்ளார். இதன்பின் பேசிய பிரதமர், இந்தியாவின் வளமான எதிர்காலக் குறியீட்டை எழுதத் துடிக்கும் ஒவ்வொரு இளைஞரையும் பாஜகவுடன் இணைக்க வேண்டும். குடும்ப அரசியலால் வஞ்சிக்கப்பட்ட இளைஞர்களின் நம்பிக்கையை பாஜகவால் மட்டுமே மீட்டெடுக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.
சென்னை : கடந்த அக்.31-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு 'அமரன்' திரைப்படம் வெளியாகி உலகம் முழுவதும் நல்ல ஒரு வரவேற்பைப்…
கோவை : தமிழக அரசின் சார்பாக நிறைவேற்றப் பட்டு வரும் பல நலத்திட்டப் பணிகள் சரியாக மக்களைச் சென்றடைகிறதா என்பதை…
வாஷிங்க்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று (நவ.-5) மாலை (இந்திய நேரப்படி) நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடும்…
டெல்லி : கனடாவில் உள்ள டொரன்டோ மாகாணத்திற்குட்பட்ட பிராம்ப்டன் எனும் பகுதியில் உள்ள ஹிந்து கோயில் மீது காலிஸ்தான் பயங்கரவாத…
சென்னை : தமிழகம் முழுவதும் மக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க விரும்புவார்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என…
அமெரிக்கா : நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுக்க தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. உலக நாடுகள்…