மத்திய அரசின் சட்டங்களை எதிர்க்கும் அதிகாரம் ஒவ்வொரு உயர்நீதிமன்றத்துக்கும் உள்ளது என உச்சநீதிமன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்றுநோய் சட்டம் குறித்த அரசியலமைப்புக்கு சவால் விடக்கூடிய ஒரு எழுத்து பூர்வமான மனுவை உச்ச நீதிமன்றம் திரும்பப்பெற வேண்டுமென ஹெர்ஷல் என்பவர் உச்சநீதிமன்றத்தில் கோரியுள்ளார். இந்நிலையில் இது சம்பந்தமாக உயர்நீதிமன்றத்தை அணுக வேண்டும் என அவருக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகளால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அதாவது நீங்கள் என்ன வகையான மனுவை தாக்கல் செய்துள்ளீர்கள் எனவும், மும்பையின் உயர்நீதிமன்றம் இது குறித்து விளக்கம் அளிக்கவில்லையா..? என்பது குறித்தும் நீதிபதி டி ஒய் சந்திரசூட் என்பவர் மனுதாரரிடம் கேட்டுள்ளார்.
மேலும் இது குறித்து நீதிபதிகள் கூறுகையில், உயர் நீதிமன்றங்களுக்கு மத்திய சட்டங்கள் விருப்பமில்லை என்றால் அதை எதிர்க்கக்கூடிய அதிகார வரம்பு உள்ளது, எனவே நீங்கள் உச்ச நீதிமன்றத்திற்கு வந்திருக்க வேண்டிய தேவையே இல்லை எனவும் கூறியுள்ளனர். அரசியலமைப்புப் பிரிவு 245, 246 அல்லது மூன்றாம் பாகத்தில் உயர்நீதிமன்றத்திற்கு மத்திய சட்டத்தை எதிர்க்க கூடிய அதிகாரம் இருப்பதாகவும் நீதிபதிகள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
எங்களுக்கு அதிகாரம் இருந்தாலும், உயர் நீதிமன்றத்திற்கும் எந்த ஒரு சட்டமும் சரி தவறு என்பதை கணித்து தீர்ப்பு அளிக்க கூடிய அதிகாரம் உள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…