ஒவ்வொரு விவசாயியும், தொழிலாளியும் ஒரு சத்யாகிரக போராளி தான். அவர்கள் தங்களின் உரிமைகளை திரும்ப பெறுவார்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் இரண்டாவது மாதமாக தொடர்ந்து வருகிற நிலையில், போராட்டத்துக்கு முடிவு கொண்டு வருவதில் மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
போராடும் விவசாயிகளுடன் மத்திய அரசு ஆறு முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இருப்பினும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விவசாயிகள் நடத்திய போராட்டத்தை சத்தியாகிரகப் போராட்டத்துடன் ஓப்பிட்டு ட்விட்டரில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் நாடு சம்பரன் (சத்தியாகிரகம்) போன்ற சோகத்தை எதிர்கொள்ளப் போகிறது. ஆங்கிலேயே அரசு அப்போது பண்ணையார்களின் ஆதரவாளர்களாக இருந்தது. இப்போது மோடியின் நண்பர்கள் அந்த பண்ணையார்களாக உள்ளன. ஆனால், ஒவ்வொரு விவசாயியும், தொழிலாளியும் ஒரு சத்யாகிரக போராளி தான் .அவர்கள் தங்களின் உரிமைகளை திரும்ப பெறுவார்கள் என தெரிவித்துள்ளார்.
துபாய் : இந்த வருட சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது. ஆனால், துரதிஷ்டவசமாக பாகிஸ்தான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று எலான் மஸ்கின் தீவிர…
சென்னை : தமிழகத்தில் சமீபகாலமாக பல்வேறு இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சி…
சென்னை : முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. 2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய…
நாகர்கர்னூல் : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை காலை…
வங்கதேசம் : வங்காள விரிகுடாவில் இன்று அதிகாலை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம்…