இந்த 5 மாநிலங்களில் இருந்து தினந்தோறும் 60% பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.!
இந்த ஐந்து மாநிலங்களில் தான் தினசரி கொரோனாவில் இருந்து குணமடைவோரின் விகிதம் அதிகம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயிலிருந்து தினந்தோறும் மீட்கப்படுவதில் 60 சதவீதம் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களில் இருந்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அந்த மாநிலங்களில் புதிதாக பாதிக்கப்படுவோரின் விகிதம் 57 சதவீதமாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.
தினந்தோறும் குணமடைவோரின் 60 சதவீதத்தில், மகாராஷ்டிரா (20.1 சதவீதம்), தமிழ்நாடு (14.2 சதவீதம்), ஆந்திரா (9.9 சதவீதம்), கர்நாடகா (8.7 சதவீதம்), உத்தரப்பிரதேசம் (6.5 சதவீதம்) என மொத்தம் 60% என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் 46,57,379 பேர் பாதிக்கப்பட்டு, 77,506 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 36,21,438 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.