பிரதமர் மோடி நேற்று காணொளி காட்சி மூலம் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், இன்று கொரோனா தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டு நாட்டு மக்களிடையே உரையாற்றினர்.
அப்போது பேசிய மோடி , அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறீர்கள். ஊரடங்கை மதித்து நடக்கும் நாட்டு மக்களுக்கு நன்றி எனவும் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவுக்கு யுத்தம் நடத்தியதற்கு நன்றி என கூறினார்.
இந்தியாவின் மக்கள் ஊரடங்கு உலகளவில் முன்னுதாரணமாகி உள்ளது.வீட்டிலிருந்து அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். 130 கோடி மக்கள் வீட்டிலிருந்தாலும் நாம் ஒற்றுமையாக இருக்கிறோம்.
மக்கள் அனைவரும் இணைந்து கொரோனாவை கட்டுப்படுத்த முயற்சி எடுத்துள்ளீர்கள். வீட்டில் இருக்கும் மக்கள் அனைவரும் இறைவனின் வடிவம் என்றார் பிரதமர் மோடி.மேலும் ஏப்ரல் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணி முதல் 9 நிமிடங்கள் வீட்டின் மின்விளக்கை அணைத்துவிட்டு, டார்ச், அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும் என கூறினார்.
கடந்த 23-ம் தேதி இரவு 8 மணிக்கு மோடி காணொலி மூலம் மக்களிடம் உரையாற்றினர்.அப்போது தான் 21 நாள் ஊரடங்கை அறிவித்தார்.மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் , செவிலியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு கைதட்டி நன்றி தெரிவிக்கவேண்டும் என கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர் உச்சம் கண்டு வந்த தங்கம் விலை, இன்று சற்று ஆறுதல்…
சென்னை : இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா எனும் சி.என்.அண்ணாதுரை அவர்களின் 56வது நினைவு தினத்தை முன்னிட்டு…
மதுரை : இந்து கடவுள் முருகனின் அறுபடைவீடுகளில் முதல் வீடாக பார்க்கப்படுவது மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன் கோயில்.…
சென்னை : இன்று (பிப்ரவரி 3) மறைந்த முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,…
நெதர்லாந்து: டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் உலக சாம்பியனான குகேஷை 2-1 என்ற கணக்கில் டைபிரேக்கரில் வீழ்த்தி கிராண்ட்மாஸ்டர்…
மும்பை : கடைசி டி20 போட்டியில் இங்கிலாந்து அணியை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய…