பாரதிய ஜனதாவிற்கு என்று தமிழகத்தில் ஒரு எம்பியும் இல்லாவிட்டாலும் பட்ஜெட்டில் குறையில்லாமல் துறைவாரியாக நிதி ஒதுக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இன்று சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் இருந்து பாஜகவிற்கு ஒரு எம்பி கூட இல்லை. இருந்தாலும், தமிழகத்திற்கு எவ்வித குறையும் இல்லாமல் பட்ஜெட்டில் துறைவாரியாக நிதி ஒதுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
2014 -இல் பிரதமர் பதவி ஏற்றவுடன் இலங்கையில் தூக்கு தண்டனை தீர்ப்பு பெற்று தவித்து வந்த 5 மீனவர்களுக்காக நம் பிரதமர் இலங்கை அரசிடம் பேசி அவர்களை நாட்டுக்கு கூட்டி வந்து குடும்பத்துடன் சேர்த்தார். அது போல தமிழகத்திற்கு ஒவ்வொரு துறைக்கும் ஏதோ ஒரு விதத்தில் மத்திய பட்ஜெட்டில் இருந்து நிதி உதவியை நீட்டித்து தான் இருக்கிறோம். பிரதமர் தமிழகத்திற்கான தேவைகளை குறையின்றி நிறைவேற்றி வருகிறார் என தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…
சென்னை : நேஷனல் கவுன்சில் ஆஃப் எஜுகேஷனல் ரிசர்ச் அண்ட் ட்ரெய்னிங் (NCERT) அமைப்பு, இந்தியாவில் பள்ளிக் கல்விக்கான பாடநூல்களை…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
சென்னை : மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து துரை வைகோ விலகுவதாக அறிவித்துள்ளார். அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக உள்ள மல்லை…
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவை கொச்சி போலீசார் கைது செய்துள்ளனர். சமீபத்தில்,…