பிரதமர் மோடி கூறும் பொய்களை டெலிப்ராம்ப்டரால்கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை..! ராகுல் காந்தி எம்.பி ட்வீட்..!

பிரதமர் மோடி கூறும் பொய்களை டெலிப்ராம்ப்டரால்கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை என ராகுல்காந்தி எம்.பி ட்வீட்.
ஐரோப்பிய நாடான ஸ்விட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் உரையாற்றி வந்த நிலையில், இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடியும் காணொலி வாயிலாக உரையாற்றினார்.
இந்நிலையில், பிரதமர் மோடி பேசிக் கொண்டிருந்த, டெலிபிராம்ப்டர் இயந்திரம் தொழில்நுட்ப கோளாறால் நின்றது. இதனையடுத்து, மோடி சில நிமிடங்கள் பேசாமல் அப்படியே நின்றார். இந்நிலையில், இதுகுறித்து ராகுல்காந்தி எம்.பி அவர்கள், இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து விமர்சித்திருந்தார்.
அந்த பதிவில், ‘பிரதமர் மோடி கூறும் பொய்களை டெலிப்ராம்ப்டரால்கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை’ என்று பதிவிட்டுள்ளார்.
इतना झूठ Teleprompter भी नहीं झेल पाया।
— Rahul Gandhi (@RahulGandhi) January 18, 2022
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025