ஆடை அணியாமல் இருப்பதும்கூட அடிப்படை உரிமையாக இருக்கும் – உச்சநீதிமன்றம்
நம் நாட்டை ஏன் அமெரிக்கா, கனடாவுடன் ஒப்பிட வேண்டும்? ஹிஜாப் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் கேள்வி.
ஆடை அணிவது அடிப்படை உரிமை எனில் ஆடை அணியாமல் இருப்பதும் கூட அடிப்படை உரிமையாக இருக்கும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். கர்நாடகாவில் கல்லூரியில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கில் நீதிபதி ஹேமந்த் குப்தா கூறியுள்ளார். நம் நாட்டை ஏன் அமெரிக்கா, கனடாவுடன் ஒப்பிட வேண்டும்? நாம் புராதனமானவர்கள் என்றும் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கும்போது அது சமூக மற்றும் கலாச்சார சூழல்களை சார்ந்தது எனவும் ஹேமந்த் குப்தா கருத்து தெரிவித்துள்ளார்.