எனக்கு ஜனாதிபதி பதவியோ அல்லது பிரதமர் பதவியை வழங்கினாலும் நான் பாஜகவுக்கு செல்ல மாட்டேன் சித்தராமையா பேச்சு.
கர்நாடக சட்டசபை தேர்தல் 2023 மே அல்லது அதற்கு முன்னதாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் மாகடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா அவர்கள் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், எனக்கு ஜனாதிபதி பதவியோ அல்லது பிரதமர் பதவியை வழங்கினாலும் நான் பாஜகவுக்கு செல்ல மாட்டேன் .எனது பிணம் கூட பாஜகவுக்கு செல்லாது தெரிவித்துள்ளார்.
ஜனதா தளத்தை பொறுத்தவரையில், அந்த கட்சிக்கு கொள்கை கோட்பாடுகள் கிடையாது. எனவே அது ஆட்சி அதிகாரத்திற்காக பாஜகவுக்கு செல்லும். ஆட்சி அதிகாரத்திற்காக யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைத்துக் கொள்வார்கள் என விமர்சித்துள்ளார்.
என்னை இந்து விரோதி என்று பா.ஜனதாவினர் சொல்கிறார்கள். அக்கட்சியை சேர்ந்த சி.டி.ரவி, என்னை சித்ராமுல்லா கான் என்று சொல்கிறார். மகாத்மா காந்தி இந்து அல்லவா?. அவரை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவை கொண்டாடுபவர்கள் இந்துக்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை : சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'புஷ்பா-2' திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி…
சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதற்காக அதானி நேரில்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…
சென்னை : தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு…
சென்னை : இன்று சர்வதேச அளவில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக வெற்றிக்…