கர்நாடகா:தனது மனைவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட கணவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கர்நாடக உயர்நீதிமன்றம் புதன்கிழமை அனுமதி அளித்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தில்,பெண் ஒருவர் தனது விருப்பம் இல்லாமல் கணவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல்துறையில் புகார் அளித்திருந்தார். அதன்படி, அப்பெண்ணின் கணவர் மீது காவல்துறையினர் பலாத்கார வழக்கு பதிவு செய்தனர். மேலும், தனது கணவர் மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் அந்த பெண் தனது புகாரில் குறிப்பிட்டதால் அவர்மீது போக்சோ சட்டம் பாய்ந்தது.
கணவர் தொடுத்த வழக்கு:
இதனையடுத்து, தன் மீது மனைவி கொடுத்த பாலியல் புகாரை நீக்க வேண்டும் என்று கணவர் கர்நாடகா உயர்நீதிமன்றத்தை நாடினார். இந்நிலையில், அப்பெண்ணின் கணவர் தொடுத்த வழக்கு நீதிபதி எம் நாகபிரசன்னா முன்பு விசாரணைக்கு வந்த நிலையில்,மனைவியின் விருப்பம் இல்லாமல் கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்ள கூடாது என்றும், இதனால், அப்பெண்ணின் மனமும் உடலும் கடுமையாக பாதிக்கும். இது போன்ற செயல்களால் பெண்களின் மனம் பாதிக்கின்றன. எனவே வழக்கை ரத்து செய்யக்கூடாது என்று மனைவியின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
கணவர் தரப்பு வாதம்:
ஆண் ஒரு பெண்ணின் மீது செய்யும் பலாத்கார செயல்களை ஒரு கணவர் செய்தால் அந்த குற்றச்சாட்டிலிருந்து அவருக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது மூத்த வழக்கறிஞரின் (கணவர் தரப்பு) வாதமாக உள்ளது.
நீதிமன்றம் கருத்து:
இரு தரப்பு கருத்துக்களை கேட்ட பின்னர், மனைவி மீது “கொடூரமான மிருகத்தை” கட்டவிழ்த்து விடுவதற்கான எந்தவொரு சிறப்பு ஆண் சலுகையையும் அல்லது உரிமத்தையும் வழங்க திருமண பந்தத்தை பயன்படுத்த முடியாது என்று நீதிபதி எம் நாகபிரசன்னா கூறினார்.
பலாத்காரம் அது பலாத்தாரம்தான்:
மேலும், ஒரு ஆண் என்பவர் ஆண்தான், ஒரு செயல் செயல்தான், பலாத்காரம் பலாத்காரம் தான், எனவே, மனைவியை கட்டாயப்படுத்தி கணவர் உறவு கொண்டால் அதை ஏற்க முடியாது, அதுவும் பாலியல் குற்றம்தான்.
அதிரடி உத்தரவு:
எனவே, தனது மனைவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட கணவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கர்நாடக உயர்நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்துள்ளது. மேலும்,அவர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் ரத்து செய்யப்படாது என்று கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி எம்.நாகபிரசன்னா உத்தரவிட்டார்.
மற்ற நாடுகளில்:
மற்ற நாடுகளில் திருமண பலாத்காரம் சட்டவிரோதமானது
இந்த தீர்ப்பு ஐபிசியின் 375வது பிரிவின் கீழ் விதிவிலக்கான அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லாவிட்டாலும், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற பிற நாடுகளில் திருமண பலாத்காரம் சட்டவிரோதமானது என்பதை போன்றது என நீதிமன்றம் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 18.8 செ.மீ மழையும், கோடியக்கரையில்…
சென்னை : தமிழகத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16-வது நிதிக்கமிஷன் நேற்று வருகை தந்தனர். அதனைத்…
சென்னை : கடந்த 2 வாரங்களாக குறைந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று நாளில் உச்சம் தொட்டுள்ளது. இதனால்…
சென்னை : பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வோர் ரயில், பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காமல் அவதியுறுவதுண்டு. அவர்கள், அரசுப்பேருந்துகளில்…
சென்னை : கடந்த நவ-14 அன்று 3D தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவான கங்குவா திரைப்படமானது தமிழ், மலையாளம், இந்தி,…
ரியோ டி ஜெனிரோ : 19-வது ஜி20 உச்சி மாநாடானது இன்று பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் தொடங்குகிறது.…