காங்கிரசும், சமாஜ்வாதியும் இணைந்தால் கூட பாஜகவை வீழ்த்த முடியாது..!
காங்கிரசும், சமாஜ்வாதியும் இணைந்தால் கூட பாஜகவை வீழ்த்த முடியாது உத்தர பிரதேச துணை முதலமைச்சர் கேசவ பிரசாத் மௌரியா தெரிவித்தார்.
உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தலையொட்டி சட்டசபை தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்கிடையில் கொரோனாவின் பரவல் காரணமாக தேர்தல் ஆணையம் பேரணிகள் மற்றும் பிரச்சாரத்திக்கான தடையை பிப்ரவரி 11 வரை நீட்டித்துள்ளது.
உத்தரபிரதேசத்தில் உள்ள 403 சட்டசபை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு வரும் 10 தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், உத்தரபிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து வந்தாலும், சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.