மும்பை: “என் காதலியை பார்க்க போகணும்னா?வாகனத்தில் என்ன கலர் ஸ்டிக்கர் ஓட்டனும்” என்று போலீசிடம் கேட்ட இளைஞர்…!

Default Image

மும்பையில் ஊரடங்கு நேரத்திலும், காதலியை சந்திக்க விரும்பும் ஒரு நபருக்கு மும்பை காவல்துறை சரியான பதிலைக் கொடுத்துள்ளது.

மும்பையில்,கொரோனா பரவல் காரணமாக வார இறுதி நாட்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,ஊரடங்கின் போது சிவப்பு,பச்சை,மஞ்சள் ஆகிய வண்ண குறியீடுகளைக் கொண்ட வாகனங்கள் மட்டுமே சாலையில் அனுமதிக்கப்படும் என்றும்,இந்த 3 வண்ணக் குறியீடுகள் உள்ள வாகனங்கள் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும்,மும்பை காவல்துறை இந்த கடுமையான முடிவை அறிவித்துள்ளது.

மேலும்,ஏதேனும் சந்தேகம் இருந்தால் மும்பை மாநகர காவல் துறையின் ட்விட்டர் பக்கத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும் காவல்துறை அறிவித்துள்ளது.காவல் துறையின் இந்த அறிவிப்பால்,மும்பை மாநகர ட்விட்டர் இன்பாக்ஸ் ஆனது SOS செய்திகளால் நிரம்பியுள்ளது

இருப்பினும் மும்பை காவல்துறையானது,ட்விட்டரில் சந்தேகம் கேட்பவர்களின் ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிக்க, தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது.

இந்த நிலையில்,மும்பையில் வசிக்கும் அஸ்வின் வினோத் என்பவர் ஒரு வித்தியாசமான கேள்வியை கேட்டுள்ளார்.அதாவது,”ஊரடங்கு நேரத்தில் என் காதலியைச் சந்திக்க வெளியே செல்லும் போது வாகனத்தில் ஸ்டிக்கரின் எந்த நிறத்தைப் பயன்படுத்த வேண்டும்”,என்று மும்பை மாநகர காவல் துறையின் ட்விட்டர் பக்கத்தில் கேட்டுள்ளார்.

இதற்கு,மும்பை காவல்துறை மிகுந்த மரியாதையுடன் கூறியதாவது, “உங்கள் காதலியை நேரில் சந்திக்க ஆசைபடுவது உங்களுக்கு இன்றியமையாதது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்,ஆனால், துரதிர்ஷ்டவசமாக இது எங்கள் அத்தியாவசிய அல்லது அவசர சூழ்நிலைகளின் கீழ் வராது.மேலும்,தூரம் தான் காதலை வளர்க்கும்.அதனால் தற்போது,நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள்,நீங்கள் வாழ்நாள் முழுவதும் ஒன்றாக இருக்க வாழ்த்துகிறோம்”என்று கூறிப் பதிலளித்துள்ளது.

இதன்மூலம்,கொரோனா ஊரடங்கு உத்தரவின் போது காதலியை சந்திக்க விரும்புவது ஒரு அத்தியாவசியமற்ற நடவடிக்கை என்பதை,மும்பை காவல்துறை அஸ்வினுக்கு தெளிவுபடுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்