பிறந்த நாளிலும் கூட நாட்டின் வளர்ச்சி பற்றிதான் சிந்தித்துக்கிறேன் என்று சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.இதனையடுத்து சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை கடந்த 5-ஆம் தேதி திகார் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.அதாவது வருகின்ற 19-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட சிதம்பரத்தின் 74- வது பிறந்தநாள் இன்று (செப்டம்பர் 16 ஆம் தேதி) ஆகும்.அவரது பிறந்த நாளான இன்று சிதம்பரம் சார்பில் அவரது குடும்பத்தினர் ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.அந்த பதிவில், பொருளாதாரத்தில் சரிவை கண்டுள்ள இந்தியாவை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.ஒரு நாட்டின்
ஏற்றுமதி ஆண்டுக்கு 20 சதவீத உயர்வு என்ற அளவில் இல்லை என்றால் உள்நாட்டு உற்பத்தியில் அந்த நாடு 8 % வளர்ச்சியை அடைய முடியாது. இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சி கடந்த ஆகஸ்டு மாதம் 6.05 % என்ற அளவிலேயே இருந்தது.
காஷ்மீர் பிரச்சினைக்கு பின் அரசின் கடைசி கவலையாக பொருளாதாரம் இருக்கிறது என்று எனது பிறந்த நாளிலும் கூட நாட்டின் வளர்ச்சி பற்றிதான் சிந்தித்துக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…