2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்தார் ஐரோப்பிய ஒன்றிய தலைவர் அர்சலா வான் டெர் லியான்…!

ஐரோப்பிய ஆணைய தலைவர் அர்சலா வான் டெர் லியான் அவர்கள் இந்தியாவிற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக வருகை தர உள்ளதாக முன்னதாகவே மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தற்பொழுது ஐரோப்பிய ஆணைய தலைவர் அர்சலா வான் டெர் லியான் இந்தியாவிற்கு வந்து விட்டார். முதல் முறையாக இந்தியா வந்துள்ள அர்சலா வான் டெர் லியான் இரண்டு நாட்கள் இந்தியாவிலிருந்து பிரதமர் மற்றும் ஜனாதிபதியயை சந்தித்து இருநாட்டு உறவு மற்றும் ஒத்துழைப்பு குறித்து பேசுவார் என கூறப்படுகிறது.
இந்நிலையில், ஐரோப்பிய ஆணைய தலைவர் அர்சலா வான் டெர் லியான் இந்தியாவுக்கு வருகை தந்தது மகிழ்ச்சி என வெளியுறவு அமைச்சகம் ட்வீட் செய்துள்ளது. இதோ அந்த பதிவு,
Warm and cordial welcome to President of the @EU_Commission @vonderleyen to India. She will be the Chief Guest at @raisinadialogue starting April 25. pic.twitter.com/dZ0zL4V1yT
— Arindam Bagchi (@MEAIndia) April 23, 2022