கார்கிலில் வசிக்கும் 1.5 லட்சம் மக்களுக்கு பாதுகாப்பாக அத்தியாவசிய பொருட்கள் கொண்டுசேர்க்கப்பட்டன.!
கார்கிலில் வாழும் சுமார் 1.5 லட்சம் மக்களுக்கு தேவையான அத்யாவசிய பொருட்களும் 900 க்கும் மேற்பட்ட லாரிகளில் பாதுகாப்புடன் சென்றதாக இந்தோ – திபெத் பாதுகாப்பு போலீசார் தகவல் தெரிவித்தனர்.
கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டுமே முதலில் அனுமதிக்கப்பட்டிருந்தது. தற்போது மே 4 முதல் தளர்வுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் பனி பிரதேசமான லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள கார்கிலில் வாழும் சுமார் 1.5 லட்சம் மக்களுக்கு தேவையான அத்யாவசிய பொருட்களும் 900 க்கும் மேற்பட்ட லாரிகளில் பாதுகாப்புடன் சென்றதாக இந்தோ – திபெத் பாதுகாப்பு போலீசார் தகவல் தெரிவித்தனர்.
கார்கில் பனிமலையில் வாழும் மக்கள் பனிமலை கீழ் பகுதியில் இருந்து வரும் பொருட்களையே நம்பி இருந்தனர். அந்த உணவு பொருட்கள் சோஜி லா மலைப்பாதை வழியாக செல்லும். அதன் படி அந்த அத்தியாவசிய வாகனங்கள் பாதுகாப்புடன் சென்றதாக இந்தோ – திபெத் பாதுகாப்பு போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து பாதுகாப்பு படையினர் வெளியிட்ட டிவிட்டர் குறிப்பில், ‘ஊரடங்கு காரணமாக கடந்த 21 நாட்களில் மட்டுமே சோஜி லா மலைப்பாதையின் வழியாக கார்கில் நகரத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை கொண்டு சென்ற 900க்கும் மேற்பட்ட லாரிகளும் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பப்பட்டது.’ என குறிப்பிடப்பட்டது.