ஒட்டுக்கேட்பு விவகாரம் : அமித்ஷா பதவி விலக வேண்டும் – ராகுல் காந்தி
பிரதமர் மோடியும், அமித்ஷாவும் இந்தியர்களுக்கு எதிராக பெகாசாசை பயன்படுத்தியதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளும் அடுத்த மாதம் 13ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், செல்போன் உளவு பார்க்கப்பட்ட விவகாரத்தை கண்டித்து இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராகுல் காந்தி அவர்கள், ஒட்டுக்கேட்பு விவகாரத்திற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும். எனது செல்போனையும் பெகாஸஸ் மூலம் ஓட்டுக்கேட்டுள்ளனர் என்றும், ரஃபேல் தொடர்பான விசாரணையை தடுக்க பெகாஸஸ் மென்பொருளை பயன்படுத்தியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், பயங்கரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்த வேண்டியதை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தியுள்ளனர் என்றும், பிரதமர் மோடியும், அமித்ஷாவும் இந்தியர்களுக்கு எதிராக பெகாசாசை பயன்படுத்தியதாக குற்றம்சாட்டியுள்ளார்.