சிறிய எழுத்து பிழை காரணமாக உத்தரபிரதேச பிரயாகராஜில் ஒரு நபர் ஜாமீன் பெற்ற போதிலும் கூடுதலாக எட்டு மாதங்கள் சிறையில் இருந்துள்ளார். ஜாமீன் உத்தரவில் அவரது நடுப்பெயர் இல்லாததால் ஒரு குற்றவாளி மேலும் எட்டு மாதங்கள் சிறையில் வைக்கப்பட்டார்.
ஜாமீன் உத்தரவு (கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது) குற்றம் சாட்டப்பட்டவரின் உண்மையான பெயர் ‘வினோத் குமார் பருவார்’ ஆனால், ஜாமீன் உத்தரவில் ‘வினோத் பருவார்’ என்று குறிப்பிட்டுள்ளதால், சிறை கண்காணிப்பாளர் விடுவிக்க மறுத்துவிட்டார்.
குற்றம் சாட்டப்பட்ட வினோத் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை செஷன்ஸ் நீதிமன்றம் 2019 செப்டம்பர் 4-ம் தேதி அன்று ரத்து செய்தது, அதன் பின்னர் அவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தை அணுகினார். இதைத்தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி ஐகோர்ட் அவருக்கு ஜாமீன் வழங்கியது, ஆனால் ரிமாண்ட் உத்தரவு மற்றும் ஜாமீன் உத்தரவில் உள்ள பெயர் வேறுபாடு காரணமாக, பார்வார் சிறையில் இருந்து விடுவிக்கப்படவில்லை.
பின்னர், அவர் தனது பெயரை திருத்துவதற்காக ஒருமனு தாக்கல் செய்தார், இது உயர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்தது. அப்போது, நீதிபதி முனீர் கூறுகையில், இந்த நீதிமன்றத்தின் உத்தரவுகளை நிறைவேற்றுவதில் சிறை நிர்வாகத்தின் பிடிவாதமான அணுகுமுறை என்று தோன்றுகிறது.
சிறை கண்காணிப்பாளர் ராகேஷ் சிங் நீதிமாற்றத்தின் முன் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. அவருக்கு எதிராக ஏன் துறை ரீதியான விசாரணையை ஏன்..? பரிந்துரைக்கக்கூடாது என கூறினார். பின்னர், எதிர்காலத்தில் ராகேஷ் சிங் கவனமாக இருக்கவும், கைதிகளை விடுவிப்பது தொடர்பான உத்தரவுகளுக்கு இணங்க வேண்டும் என நீதிமன்றம் எச்சரித்தது. இறுதியாக பார்வார் டிசம்பர் 8 அன்று சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக…
சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…
டெல் அவில் : இஸ்ரேல் ஹமாஸ் போரானது கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் தொடங்கி 15 மாதங்களை கடந்து…
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…