ராணுவத்தைப் போன்று கடற்படையிலும் பெண்களுக்கு சம உரிமை – உச்சநீதிமன்றம் உத்தரவு.!
ராணுவத்தைப் போன்று கடற்படையிலும் பெண்களுக்கு சம உரிமை வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவுட்டுள்ளது. நிரந்திரப் பணியில் ஆண், பெண் என பிரித்துப் பார்க்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் கடற்படை அதிகாரிகள் அளவிலான பணிகளில் பெண்களுக்கும் சம உரிமை வழங்க வேண்டும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ராணுவத்தில் களத்தில் இறங்கி சண்டையிடாத பணிகளில் பெண்களுக்கு நிரந்திர பணி தர ஏற்கனவே உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது பெண்களுக்கு கடற்படையில் சம உரிமை வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்பால் அதிகாரிகள் மட்டத்தில் ஆண்களுக்கு நிகரான சலுகைகளை பெண்களும் பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுபோன்று ராணுவத்திலும் பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.