முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு டெல்லி ஏர்போர்ட்டில் உற்சாக வரவேற்பு…!

சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி விமானநிலையம் சென்றடைந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக, 2 நாள் அரசுமுறை பயணமாக, சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி விமானநிலையம் சென்றடைந்தார். அங்கு அவருக்கு, சிறப்பு பிரதிநிதி விஜயன் மற்றும் திமுக எம்பிக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
தமிழக முதல்வரான பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக சந்திக்கும் உள்ளார். இந்த சந்திப்பானது இன்று மாலை 5 மணி அளவில், டெல்லியில் பிரதமர் அலுவலகத்தில் வைத்து நடைபெறுகிறது.
இந்த சந்திப்பின்போது, செங்கல்பட்டு தடுப்பூசி மையம், நீட் தேர்வு மற்றும் ஜிஎஸ்டி நிலுவைத் தொகை குறித்து பேச வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், நாளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை சந்திக்க உள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
”என்னமோ நான் வயசுக்கு வந்த புள்ளைய கற்பழிச்சு விட்ட மாதிரி பேசுறீங்க ” – சீமான் சர்ச்சைப் பேச்சு.!
February 28, 2025
“நான்தான் சம்மனை கிழிக்கச் சொன்னேன், என்னை கைது செய்ய வேண்டியதுதானே” – சீமான் மனைவி கயல்விழி!
February 28, 2025