கேரளாவில் வாக்குச்சாவடியில் பணியில் ஈடுபட்ட ரோபோ மக்கள் மத்தியில் உற்சாக வரவேற்பு!
கேரளா வாக்குச்சாவடியில் பணியில் ஈடுபட்ட ரோபோ. வாக்காளர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்வதோடு, கொரோனா விதிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுத்துகிறது.
கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகின்ற நிலையில், இந்தத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற்று வருகிற நிலையில், நேற்று இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. திரிககர சமுதாய மண்டப வாக்கு சாவடியில் ரோபோ ஒன்று பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ரோபோ வாக்குச்சாவடிகளில் வாயிலில் சிரித்த முகத்துடன், வாக்காளர்களை வரவேற்று, கை கழுவும் திரவத்தை வழங்கி, முகக்கவசத்தை சரியாக அணியுமாறு அறிவுறுத்துகிறது. பின் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்து, வெப்பநிலை அதிகமாக இருக்கும் பட்சத்தில் வாக்குச்சாவடி அதிகாரியை தொடர்பு கொள்ளுமாறு கூறுகிறது. வாக்குச்சாவடிக்கு முன்பாக கூட்டமாக இருக்கும் போது சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு வாக்காளர்களுக்கு அறிவுறுத்துகிறது.
ரோபோவை பணியில் ஈடுபடுத்தியதால், வாக்காளர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. ஒரு வாக்குச் சாவடியில், ரோபோ பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை. இது ஒரு பெரிய சாதனை என்றும், ரோபோவை உருவாக்கிய அசிமோவ் ரோட்டோடிக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டி.ஜெயகிருஷ்ணன் அவர்கள் கூறியுள்ளார்.