ஜெய்ஸ்ரீராம் என கோஷமிட்டபடி கல்யாண வீட்டில் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கொல்லப்பட்டுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் மண்ட்சோர் பகுதியில் உள்ள பைண்ட்சோடா மண்டி எனும் இடத்தில் நேற்று திருமண விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவினை கைதாகி சிறையில் இருக்கக் கூடிய சாமியார் ராம்பாலின் ஆதரவாளர்கள் நடத்தியுள்ளனர். இந்த விழாவின் போது அங்கு வந்த பத்து பதினைந்து பேர் கொண்ட கும்பல் திருமணம் தவறான முறையில் நடத்துவதாக கூறி சரமாரியாக தாக்கியுள்ளனர்.
பின் துப்பாக்கியுடன் உள்ளே வந்த சிவப்பு சட்டை அணிந்த நபர், ஒருவரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இதில் தேவிலால் மீனா என்பவர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.
இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை அடிப்படையாக வைத்து 11 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் மூன்று பேரை கைது செய்துள்ளனர். கல்யாண விழாவில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…
காஞ்சிபுரம் : சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில்…
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…