Yes Bank நிறுவனர் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை.!

Default Image

நிதி நெருக்கடியிலும், பண மோசடிலும் சிக்கி தவிக்கும் யெஸ் வங்கியை தனது கட்டுப்பாட்டுக்குள் கீழ் கொண்டுவந்தது ரிசர்வ் வங்கி. இதையடுத்து வாடிக்கையாளர்கள் முதலீடு செய்த பணம் பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும் பணம் பாதுகாப்பாக இருப்பதாகவும் மத்திய நிதித்துறை அமைச்சர் உறுதியளித்தார். இதனிடையே யெஸ் வங்கியின் நிறுவனர் ராணா கபூர் மீது பணப் பரிவர்த்தனை மோசடி தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவர், வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்லாத வகையில் பாஸ்போர்ட்டை முடக்கவும், அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு நிறுவனங்களுக்கு கோடிக் கணக்கில் கடன் வழங்கியது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் ராணாவிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்