அமலாக்கத்துறை எந்த ஒரு தனிநபருக்கும் அப்பாற்பட்ட அமைப்பாகும் – அமித்ஷா
அமலாக்கத்துறை எந்த ஒரு தனிநபருக்கும் அப்பாற்பட்ட அமைப்பாகும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
அமலாக்கத்துறை இயக்குநர் எஸ்.கே மிஸ்ராவின் பதவி காலத்தை மத்திய அரசு 3-வது முறையாக ஒரு வருடம் நீட்டித்து உத்தரவிட்டிருந்த நிலையில், இந்த பதவி நீட்டிப்பு ரத்து செய்யப்படுவதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 3வது முறையாக பதவி நீட்டிப்பு வழங்கியதை ரத்து செய்த நிலையில், அவரது பதவி காலத்தை ஜூலை 31-ஆம் தேதி வரை குறைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள், அமலாக்கத்துறை எந்த ஒரு தனிநபருக்கும் அப்பாற்பட்ட அமைப்பாகும். பணமோசடி, அந்நிய செலாவணி சட்டங்களை மீறுதல் போன்ற குற்றங்களை விசாரிப்பதே அமலாக்கத்துறையின் நோக்கம். நோக்கத்தை அடைவதில் அமலாக்கத்துறை கவனம் செலுத்துமே தவிர அதன் இயக்குநர் யார் என்பது முக்கியமல்ல என தெரிவித்துள்ளார்.