Delhi Minister Rajkumar Anand [File Image]
ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த டெல்லி சமூக நலத்துறை அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் வீட்டில் இன்று அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். டெல்லி சுங்கத்துறையினர் ஏற்கனவே ஹவாலா பணபரிவார்தனை பற்றி அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் மீது ஏற்கனவே புகார் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இருந்தனர்.
இந்த ஹவாலா பணப்பரிவர்தனை விவகாரத்தில் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக கூறி அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து இன்று அமைச்சர் வீடு மற்றும் அவர் தொடர்புடைய 8 இடங்கள் என மொத்தம் 9 இடங்களில் இன்று அதிகாலை முதலே சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
எச்சரிக்கை மெயிலுக்கும் ஜார்ஜ் சொரோஸ்க்கு தொடர்பு… அமித் மாளவியா..!
இந்த சோதனையானது மதுபான கொள்கை ஊழல் தொடர்பான பணப்பரிவர்த்தனை வழக்கு அல்ல என்றும், இது ஹவாலா பண பரிவர்த்தனை வழக்கு தொடர்பான சோதனை என்று தான் இதுவரை தகவல்கள் வெளியாகி உள்ளன.
டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பான பணப்பரிவர்த்தனை வழக்கில் இன்று டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் , அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளார். இந்த சமயத்தில் டெல்லி அமைச்சர் வீட்டில் நடைபெற்று வரும் அமலாக்கத்துறை சோதனை டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை : இரண்டு நாள் பயணமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தடைந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம்…
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே ஏற்பட்ட ஒரு துயரமான சாலை விபத்தில், சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி…
பெங்களூர் : விராட் கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். இப்போது விராட் ஐபிஎல்லில் தனது பெயரில்…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று (ஏப்.11)…
சென்னை : 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா நேற்றிரவு 11:30…
சென்னை : 2026 சட்டப்பேரவை தேர்தலை கவனத்தில் கொண்டு தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் செயல்பட்டு வருகிறார்.…