extends ed remandof arvind kejriwal(PTI)(HT_PRINT)
Arvind Kejriwal: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அமலாக்கத்துறை காவல் ஏப்ரல் 1ம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21-ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதன்பின் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை காவல் விதிக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த சூழலில், அரவிந்த் கெஜ்ரிவாலின் அமலாக்கத்துறை காவல் இன்றுடன் முடிந்த நிலையில், டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மேலும் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என அமலாக்கத்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அமலாக்கத்துறை காவல் ஏப்ரல் 1ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்ட 6 நாள் காவல் இன்றுடன் நிறைவடையும் நிலையில், தற்போது அமலாக்கத்துறை கோரிக்கை ஏற்று மேலும் 4 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1ம் தேதி காலை 11:30 மணிக்கு அரவிந்த் கெஜ்ரிவாலை மீண்டும் ஆஜர் படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே, அமலாக்கத்துறை காவல் நீட்டிப்புக்கு அரவிந்த் கெஜ்ரிவால் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. நீங்கள் விரும்பும் வரை அமலாக்கத்துறை எங்களை விசாரிக்கலாம் என கெஜ்ரிவால் கூறிய நிலையில், காவலை நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
வழக்கு விசாரணை என்ற பெயரில் பணம் பறிப்பு நடவடிக்கைகயில் அமலாக்கத்துறை ஈடுபடுவதாகவும், தன் மீது தொடர்ந்துள்ள வழக்கு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என நீதிபதி முன்னிலையில் தன் வழக்குக்காக தானே வாதிட்ட கெஜ்ரிவால் அமலாக்கத்துறை மீது சரமாரியாக குற்றச்சாட்டை முன்வைத்தார்.
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…
சென்னை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 467 மதிப்பெண்களுடன் தமிழில் 93 மதிப்பெண் எடுத்து பீகார் மாணவி ஜியா…
சென்னை : இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்துள்ள ''தக் லைஃப்'' திரைப்படம் ஜூன் 5ம்…