முன்னாள் காங்கிரஸ் அமைச்சரின் மகளுக்கு அமலாக்க துறையினர் சம்மன்!

இரண்டு வருடங்களுக்கு முன்பு கர்நாடக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார் அவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது டெல்லியில் உள்ள அவரது வீட்டில் 8.50 கோடி ரூபாய் கிடைத்ததாக தகவல் வெளியானது. இது தொடர்பாக விசாரணையை வருமானத்துறை நடத்தி வருகிறது. இந்த வலக்கை அமலாக்கத் துறையினர் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அமலாக்க துறை வழக்கிற்காக டி.கே.சிவகுமார் முன்ஜாமின் கேட்டு இருந்தார். ஆனால், அந்த மனு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
பின்னர், இந்த வருடம் ஆகஸ்ட் 30ஆம் தேதி அமலாக்கத்துறைஇடம் டி.கே.சிவகுமார் நேரடியாக ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைத்தார். இந்த விசாரணையில் சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத் துறையினர் இந்த மாதம் 3ஆம் தேதி அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுமார் 600 கோடி ரூபாய்க்கு அதிபராக டி.கே.சிவகுமாரும், அவரது மகள் ஐஸ்வர்யாவும் உள்ளதாக தகவல் வெளியானது. அதன் மூலம் பெருமளவு சொத்துக்களும் முதலீடுகளும் உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இது தொடர்பான விசாரணைக்காக வருகிற 12-ஆம் தேதி (நாளை) விசாரணைக்கு அமலாக்கத்துறையிடம் ஆஜராகும்படி ஐஸ்வர்யாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்மனை வீட்டிற்கே சென்று அதிகாரிகள் அளித்துள்ளனர்.